விபத்தில் சிக்கிய நடிகை பூஜா ஹெக்டே..! கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே விபத்தில் சிக்கி, காயமடைந்த கால்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தெலுங்கு திரையுலகம் தான். கதைக்கு தேவை என்றால் எல்லை தாண்டிய கவர்ச்சியை கூட காட்ட தயாராக இருக்கும், 'பீஸ்ட்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதையும் அதிகம் கவர்ந்து விட்டார்.
இயக்குனர், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த படம், படு தோல்வியடைந்ததால், தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். அதே நேரம் இவர் நடித்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இவரது கை வசம் ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்கள் கைவசம் உள்ளன.
மேலும் செய்திகள்: Parvati Nair: அஜித் பட நடிகை பார்வதி நாயர் சென்னை வீட்டில் திருட்டு!
நடிப்பை தாண்டி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை வசீகரித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹிந்தியில் இவர் நடித்த வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்கிற படத்தின் படப்பிடிப்பு போது, தவறி விழுந்ததில், பூஜாவின் இடது காலில் உள்ள தசை நார் கிழிந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
தற்போது மருத்துவர்களின் அறிவுரை படி... சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காலில் கட்டுபோட்டுள்ள புகைப்படத்தை இஸ்டாகிராம் ஸ்டோரியில், புகைப்படம் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ரசிகர்களும் விரைவில் பூஜா ஹெக்டே நலமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Nayanthara Salary 'God Father' படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா? வெளியான தகவல்!