நடிகை திரிஷாவுக்கு திடீரென வந்த அரசியல் ஆசை.... தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்க திட்டம்..!
Trisha : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, விரைவில் தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கும் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
மேலும் இவர் கைவசம் தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் எனும் படம், தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் திரிஷா, இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அருண்விஜய்யின் தமிழ்ராக்கர்ஸ் டீமுக்கு அதிர்ச்சி கொடுத்த ரியல் தமிழ்ராக்கர்ஸ் - முழு வெப்தொடரும் லீக்கானது
நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதால், விரைவில் நடிகை திரிஷாவும் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது புதிய முடிவு பலரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அது என்னவென்றால், நடிகை திரிஷா விரைவில் அரசியலில் எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்க இருக்கிறாராம்.
ஜெயலலிதா போல் அரசியலில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடன் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம். விரைவில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவர் அரசியலுக்கு சென்றுவிட்டால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பிகில் கிளப்பிய திருச்சிற்றம்பலம்... தனுஷ் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா...?