அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ் டீமுக்கு அதிர்ச்சி கொடுத்த ரியல் தமிழ் ராக்கர்ஸ் - முழு வெப் தொடரும் லீக்கானது
Tamilrockerz : அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் தொடர் பைரசி தளத்தில் வெளியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண்விஜய், முதன்முறையாக நடித்த வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் ஈரம், வல்லினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் தான் இந்த வெப் தொடரையும் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தான் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது.
இதில் நடிகைகள் வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சினிமா உலகுக்கே பெரும் சவாலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் எனும் ஆன்லைன் பைரசி தளத்தை பற்றி தான் இந்த முழு வெப் தொடரையும் உருவாக்கி உள்ளனர். இந்த வெப் தொடர் இன்று அதிகாலை நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதையும் படியுங்கள்... அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளில் இந்த வெப் தொடர் வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடர் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைன் பைரசி தளத்தில் லீக் ஆகி உள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் ராக்கர்ஸை பற்றிய வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸிலேயே திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது அந்த வெப் தொடர் டீமையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் ஹெச்.டி தரத்தில் அந்த வெப் தொடரை தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றி உள்ளார்களாம். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... 54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை!