காசுக்காக பொய் சொல்கிறாரா த்ரிஷா? பாடகர் கருத்தால் பரபரப்பு!
நடிகை த்ரிஷா காசுக்காக பொய் சொல்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க பாடகர் கான்வே வெஸ்ட் சமீபத்தில் கூறி இருந்த கருத்து.

20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகி:
தென்னிந்திய திரை உலகில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. பிரஷாந்த் - சிம்ரன் நடிப்பில் வெளியான 'ஜோடி' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, இன்று பல கோடி சம்பளம் வாங்கும் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். 40 வயதை எட்டிய பின்னரும் இவருக்கான மார்க்கெட் குறையாத நிலையில், அடுத்தடுத்து விஜய் - அஜித் படங்களில் நடித்து இளம் ஹீரோயின்களை பொறாமை பட வைத்துள்ளார்.
விடாமுயற்சி:
கடந்த 2023- ஆம் ஆண்டு, இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியானது. பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'விடாமுயற்சி' படத்தின் கதைக்களம் கொஞ்சம் வீக்காக இருந்தாலும், காட்சிகள், அதை கொண்டு சென்ற விதம், இப்படத்தில் சொல்லி உள்ள மெசேஜ் போன்றவை பாராட்டுகளை பெற்று வருகிறது.
த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
குட் பேட் அக்லீ ஏப்ரல் மாதம் ரிலீஸ்
இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதேபோல் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 45 வது திரைப்படத்திலும், மோகன்லால் நடிப்பில் உருவாக்கி வரும் ராம் படத்திலும் த்ரிஷா ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் வெற்றி
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிப்டோ கரன்சி தொடர்பான சில விளம்பரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்தது சில விளம்பர பதிவுகள் வெளியான நிலையில், நடிகை த்ரிஷா தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார். அதனை மீட்க்கும் பணிகள் நடந்து வருவதாக கூறினார்.
த்ரிஷா தான் விடாமுயற்சி படத்தின் வில்லியா? உளறிய பிரபலம் - டீ கோட் செய்த ரசிகர்கள்!
பாடகர் கான்வே வெஸ்ட் கருத்து:
இது ஒருபுறம் இருக்க, பிரபல அமெரிக்க பாடகர் கான்யோ வெஸ்ட் கூறிய கருத்துடன், தற்போது த்ரிஷாவை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள். சமீபத்தில் பாடகர் கான்வே வெஸ்ட், "சோசியல் மீடியாவில் சம்பந்தமே இல்லாமல் சில பொருட்களை பிரபலங்கள் புரமோட் செய்வதாகவும், அதன் பின்னர் தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக விளக்கம் கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அவர்களுக்கு மிகப்பெரிய சன்மானம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த பாடகரின் கருத்துடன் த்ரிஷாவின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட சம்பவமும் பொருந்தி போவதால்... த்ரிஷா பணத்துக்காக பொய் சொல்கிறாரா? என நெட்டிசன்கள் பேச துவங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.