த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

த்ரிஷா
நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வருகிறார். த்ரிஷா நடிப்பில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்த த்ரிஷாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் விடாமுயற்சி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிஸியான நடிகை
த்ரிஷா அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் குட் பேட் அக்லி, சூர்யா 45 ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். இப்படி 41 வயதாகும் நிலையில் த்ரிஷா பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
க்ரிட்போ பதிவுகள்
இந்த நிலையில் இன்று த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் வந்துள்ளது. எனினும் அந்த பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மீண்டும் த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவு பதிவிடப்பட்டது. எனவே த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
எக்ஸ் கணக்கு ஹேக்
இந்த நிலையில் நடிகை த்ரிஷா இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரின் பதிவில் “ எனது X பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது சரி செய்யப்படும் வரை அதில் வரும் பதிவுகள் என்னுடையது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.