Tamannaah Bhatia: வேற லெவல் ஃபேஷன்! உடலோடு ஒட்டி இருக்கும் சில்வர் நிற உடையில்... ஐயன் லேடியாக மாறிய தமன்னா!
பிலிம் பேர் விருது நிகழ்ச்சியில் தாராள கவர்ச்சியை காட்டி, இளம் ரசிகர்கள் மனதை ஏங்க வைத்து வரும் தமன்னா (Tamannaah Bhatia), தற்போது ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் படு வித்தியாசமான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடிநடித்தவர். தற்போது நயன்தாராவின் பாணியில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால்.. பட வாய்ப்பை பிடிக்க விதவிதமான உடையில் தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் பார்க்கமுடிகிறது.
அதே போல் விருது விழாக்கள் மற்றும் பட விழாக்களில் படு வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் பிலிம் பேர் நிகழ்ச்சியில்... பளபளவென்று மின்னும் சில்வர் நிற உடையில் ஐயன் லேடியாக மாறி பலரையும் பிரபமிக்க வைத்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
வேற லெவல் ஃபேஷன் உடையில்... ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார் தமன்னா.
மேலும் இந்த பிலிம் பேர் நிகழ்ச்சியில், சிறந்த ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் ' தி பேமிலி மேன் 2 '-விற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற நடிகை சமந்தாவிற்கு கூட தமன்னா விருது வழங்கும் போது மேடையில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.