ஸ்கின் கலர் உடையில்... செதுக்கி வச்ச சிலை போல் பொது இடத்திற்கு வந்த தமன்னா! Exclusive கியூட் போட்டோஸ்!
நடிகை தமன்னா, ஸ்கின் கலர் உடையில், மும்பையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது... சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக இருக்கும், தமன்னா... ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இந்தாலும், மற்றொரு பக்கம் சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகை தமன்னா ஹிந்தி திரைப்படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இவரை பிரபல நடிகையாக மாற்றியது தமிழ் திரையுலகம் தான்.
அழகும், திறமையும் இருந்தாலும்... தமன்னா அறிமுகமான உடனேயே முன்னணி நடிகையாக மாறிவிட வில்லை. ஆரம்பத்தில் பல தோல்விகளை கடந்து, தன்னுடைய நடிப்பு திறமை மூலம் ரசிகர்கள் மனதில் நீக்காத இடம் பிடித்தார்.
தமிழில் தமன்னா அறிமுகமான கேடி படத்தில், இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. இதை தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர், படிக்காதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாக அயன் படத்திலும் நடித்தது இவரை முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் சேர்த்தது.
பின்னர் விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக மாறினார்.
குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. எனவே பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை இதுகுறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மும்பையில் பொது வெளிக்கு வந்த தமன்னா ஸ்கின் கலர் உடையில்... ஹை ஹீல்ஸ் போட்டபடி பூரித்த புன்னகையோடு கேமராவுக்கு போஸ் கொடுத்த exclusive புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.