நடிகை ஶ்ரீதேவியின் கடைசி நிமிட போட்டோஸ்!- முதன்முறையாக மனம் திறந்த போனிகபூர்! நடந்தது என்ன?
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் தான் தங்கியிருந்த துபாய் ஹோட்டலின் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். ஶ்ரீதேவி மரணம் குறித்து முதல் முறையாக, போனி கபூர் மனம்திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஶ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 2018ம் ஆண்டு துபாய் சென்ற அவர் உயிருடன் நாடு திரும்பவில்லை. இந்திய அழகியை, கனவுக்கன்னியை துபாய் பறித்துக்கொண்டது. திருமண விருந்தில் கலகலப்பாக அவர் இருந்த கடைசி நிமிட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நடிகை ஶ்ரீதேவி தான் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள பாத்ரூம் தொட்டியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
ஶ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம் தற்செயலாக நீரில் மூழ்கியது என மருத்துவ அறிக்கை தெரிவித்தாலும், ரசிகர்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து போனி கபூர் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ஶ்ரீதேவி க்ராஷ் டயட் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
இந்த டோலிவுட் குயின்களின் வாழ்க்கையில் ஒரே சோகம் தான்.. என்னாச்சு தெரியுமா?
நடிகை ஶ்ரீதேவி தான் அழகாக இருக்கவும், தன் உடலை கட்டுப்கோப்பாக வைக்கவும் “அவள் அடிக்கடி பட்டினி கிடப்பாள்; அவள் அழகாக இருக்க விரும்பினாள். அவள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய விரும்பினாள். அதனால் திரையில் அவள் அழகாக தெரிந்தார் என போனிகபூர் கூறியுள்ளார். தனக்கு திருமணம் ஆனதில் இருந்து, ஶ்ரீதேவி இரு முறை மயங்கிவிழுந்துள்ளார். ஆனால் உயிருடன் வந்துவிட்டார். மேலும் அவளுக்கு Low Bp பிரச்சினை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார் என்றும் குறிப்பிட்டார்.
ஶ்ரீதேவியின் மரணம் குறித்து, 48 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போனிகபூர், “இது இயற்கை மரணம் அல்ல; அது ஒரு தற்செயலான மரணம். விசாரணையின் போது தன்னிடம் கிட்டத்தட்ட 24 அல்லது 48 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறினார். இந்திய ஊடகங்களில் இருந்து அதிக அழுத்தம் இருந்ததால் நாங்கள் இதை கடந்து செல்ல வேண்டியிருந்தது என்றார்.
ஊத்தி கொடுத்த அம்மா.. உண்மையில் சரக்குக்கு அடிமையானாரா நடிகை ஸ்ரீதேவி? பிரபலம் சொன்ன தகவல்!
ஆறுதல் கூற நாகார்ஜுனா இல்லத்திற்கு வந்த போது, நடிகை ஶ்ரீதேவி படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துவிட்டதாக கூறியதை நினைவுபடுத்தினார். ஸ்ரீதேவி பிப்ரவரி 28, 2018 அன்று துபாயில் இறந்தது குறிப்பிடத்தக்கது.