- Home
- Gallery
- ஊத்தி கொடுத்த அம்மா.. உண்மையில் சரக்குக்கு அடிமையானாரா நடிகை ஸ்ரீதேவி? பிரபலம் சொன்ன தகவல்!
ஊத்தி கொடுத்த அம்மா.. உண்மையில் சரக்குக்கு அடிமையானாரா நடிகை ஸ்ரீதேவி? பிரபலம் சொன்ன தகவல்!
Kollywood Heroine : தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் உலகில் மெகா ஹிட் நடிகையாக வலம்வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

sridevi
நடிகை ஸ்ரீதேவி குறித்து பேசும்போது அனைவரும் அவர் தமிழில் இருந்து சென்று பாலிவுட் உலகில் மிகப்பெரிய ஹீரோயினாக மாறினார் என்று தான் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் தமிழில் இருந்து சென்று மெகா ஹிட் நடிகையாக மாறியது தெலுங்கில் தான். காரணம் தமிழிலும், ஹிந்தியிலும் அவர் தலா 73 மற்றும் 74 படங்கள் நடித்துள்ள நிலையில், தெலுங்கில் ஸ்ரீதேவி 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
actress sridevi
1960ம் ஆண்டு பிறந்த நடிகை ஸ்ரீதேவி தனது 7வது வயது முதல் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் அவர். விருதுநகர் மீனம்பட்டியில் துவங்கிய அவரது பயணம், அமீரகத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் முடிந்தது தான் பெரிய சோகம். பலரும் அவரது மரணத்திற்கு காரணம், அவரிடம் இருந்த தீயபழக்கம் என்றும் கூறுவதை கேட்கமுடிகிறது.
kollywood actress sridevi
இந்நிலையில் அவரோடு இளமை காலத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை குட்டி பத்மினி ஸ்ரீதேவி குறித்து சில விஷயங்களை மனம்திறந்துள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்கு அவரது தாய், சிறு வயது முதலே Wine கொடுக்கும் பழக்கத்தை வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். யாரோ, அதை உண்டால் நல்லது என்று சொன்னதை கேட்டு, தினமும் ஸ்ரீதேவிக்கு அவருடைய தாய் Wine கொடுப்பார்.
bollywood actress sridevi
ஒரு கட்டத்தில் அந்த Wine குடிக்கும் பழக்கத்தை அவரால் விடமுடியாமல் போனது, பின் அதற்கு அவர் அடிமையானார் என்றார் பத்மினி. பாலிவுட் உலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் உள்ள ஜுமேரா எமிரேட்ஸ் டவர்ஸ் அவரது அறையில் இருந்த குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார்.
மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு வெளிய வா... காமெடி நடிகர் யோகிபாபுவின் கறார் பேச்சுக்கு வழுக்கும் எதிர்ப்பு