பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை சினேகா, அழகிய சிலை போல் நின்று பட்டு புடவையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சினேகா தன்னுடைய மகள் பிறந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும், குழந்தை பெற்ற பின்னர் எடை கூடியும் காணப்பட்டார்.
ஆனால் தற்போது அவருடைய மகன் - மகள் இருவருமே நன்கு வளர்ந்து விட்டதால், உடல் எடையை பாதியாக குறைத்து... மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, ஷாட் பூட் திரி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: கணவர் இறந்த பின்னர்.. முதல் முறையாக தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா!
இதற்க்கு முன்னர், கடைசியாக சினேகா நடிப்பில், கடந்த 2020 ஆம் ஆண்டு தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த 'பட்டாஸ்' படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில், பழங்கால தற்காப்பு கலையான, அடிமுறை பற்றி ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக இப்படம் வெளியானது. இந்த படத்திற்காக அடிமுறை பயிற்சி பெற்று நடித்திருந்தார் சினேகா. அந்த சமயத்தில் சினேகா கர்ப்பமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளதால், அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.அந்த வகையில், தற்போது அழகிய பட்டு புடவையில்... தேவதை போல் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை, சினேகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்