Sneha Police Compliant: என்னை ஏமாத்திட்டாங்க... காவல் நிலையத்தில் நடிகை சினேகா பரபரப்பு புகார்!!
சினிமா நடிகை சினேகா (Actress Sneha) சிமெண்ட் கம்பெனியில் முதலீடு செய்து லாபம் வராத காரணத்தினால், தன்னை ஏமாற்றி விட்டதாக தற்போது கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை சினேகா கானத்தூர் பனையூர் பகுதி உள்ள ஐந்தாவது அவென்யூவில் வசித்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கக்கூடிய கொளரி சிமெண்ட் என்கிற கம்பெனியில் கடந்த மே மாதம் 26 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
சினேகாவின் கணவர் பிரசன்னாவிடம் அவருடைய நண்பரான பிரசாந்த், மற்றும் மற்றொருவர் சிமெண்ட் கம்பெனியில் முதலீடு செய்யுமாறு கூறியதன் காரணமாக சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்ததாக தெரிகிறது.
ஆனால் இதுவரை எந்தவிதமான லாபமும் வராத காரணத்தினால் தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சினேகாவின் கணவர் பிரசன்னாவின் நண்பர் பிரசாந்த் என்பவர் ஏற்கனவே 40 லட்சம் ரூபாயை சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்திருப்பதாகவும். சிமெண்ட் கம்பெனியில் முதலீடு செய்தால் மாதம் மாதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இந்த நிலையில் சினேகா - பிரசன்னா இருவரும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கக்கூடிய சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த மே மாதம், முதல் தற்போது வரை எந்தவிதமான லாபமும் வரவில்லை என கடந்த மாதம் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை விசாரித்த நீலாங்கரை போலீசார் சினேகாவின் இல்லம் கானத்தூர் இருப்பதால் இந்த புகாரை நேற்று கானத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றி அமைத்தார்கள். இந்த நிலையில் கானத்தூர் போலீசார் ஆந்திராவில் இருக்கக்கூடிய சிமெண்ட் கம்பெனிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.
சினேகா சிமெண்ட் கம்பெனியில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டது தொடர்பாக போலீசார் இரண்டு பக்கமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.