- Home
- Cinema
- பணத்துக்காக இப்படியா... கூச்சமே இல்லாமல் அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஓகே சொன்னாரா ஸ்ருதி ஹாசன்?
பணத்துக்காக இப்படியா... கூச்சமே இல்லாமல் அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஓகே சொன்னாரா ஸ்ருதி ஹாசன்?
நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruthi hassan), அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சில காலம் சினிமாவை விட்டு விலகி ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும், 'லாபம்' படத்தின் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தெலுங்கிலும், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரை மற்ற சில படங்களிலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாக கூறப்பட்டது.
அந்த வகையில், இயக்குனர் கோபிசந்த் மாலினேனி அடுத்ததாக 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை படக்குழு அணுகிய நிலையில், அடுத்தடுத்து சில படங்களில் நடிப்பதால், அவர் அந்த பட வாய்ப்பை மறுத்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் தான் செட் ஆவார் என படக்குழு பிடிவாதமாக இருந்து மிகப்பெரிய சம்பளத்தை பேசி, ஒருவழியாக ஸ்ருதியை பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு தற்காலிகமாக 'NBK107' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக பாலகிரிஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி.
ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பாலாபு' மற்றும் 2020 பிளாக்பஸ்டர் படமான 'கிராக்' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைய உள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னர் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும், 'சலார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் ஸ்ருதி - பாலகிருஷ்ணா நடிக்க உள்ள படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.