ஆமாங்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன்..உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி ஹாசன்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை நடிகைகள் ஒப்புக் கொள்வதில்லை .நீங்கள் எப்படி தைரியமாக பேசியுள்ளீர்கள் என ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் பிரபல நடிகையாக உள்ளார். தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் தனுஷின் 3, விஷாலுடன் பூஜை, விஜய் உடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3 விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வலையை உடையாக அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் கவர்ச்சி பரப்பும் ரைசா வில்சன்
முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். முன்னதாக பாப் பாடகியான இவர் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானவர் தான் ஸ்ருதிஹாசன். லாபம் படத்தை தொடர்ந்து இவருக்கு பெரிதாக தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு...trisha : நெக்லஸ் கல் அழகா? திரிஷா கண் அழகா? கன்ப்யூஸாகும் ரசிகர்கள்
பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். முன்னதாக காதல் பிரிவு காரணமாக சில காலம் மன உளைச்சலால் சினிமா உலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்ருதிஹாசன்.
தற்போது தாறுமாறாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதோடு தனது புதிய காதலர் உடன் இவர் அடிக்கடி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
முன்பை விட தற்போது மிகவும் கட்டுக்கோப்பாக பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு மாறிவிட்ட இவரின் கவர்ச்சி அலப்பறைகள் இன்ஸ்டாகிராமில் தாங்க இயலவில்லை.
இந்நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆமாம் என் மூக்கை சரிசெய்தேன் மூக்கு உடைந்து விட்டது அந்த மூக்குடன் தான் முதல் படத்தில் நடித்த அதன்பிறகே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன் என கூறியுள்ளார்.
மேலும் என் மூக்கை நான் சரி செய்தேன். என் முகம் நான் ஏன் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை நடிகைகள் ஒப்புக் கொள்வதில்லை .நீங்கள் எப்படி தைரியமாக பேசியுள்ளீர்கள் என ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.