“சினிமாவில் எப்பவுமே பாலியல் தொந்தரவு இருக்கும்; இப்ப பேசுறது எல்லாம்” பிரபல நடிகை ஷாக் தகவல்!
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை சாரதா ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக இருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த அறிக்கை குறித்து மலையாள நடிகைகள் மட்டுமின்றி தமிழ் நடிகைகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அறிக்கையில் பலர் முன்னணி நடிகர்கள் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Hema committee report
மலையாள திரையுலகில் அதிகரித்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நடிகரும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முன்னாள் தலைவருமான மோகன்லால் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த சங்கத்தில் இருந்த 17 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
Hema committee report
ஹேமா கமிட்டி குறித்து பேசிய மோகன்லால் “ இரண்டு முறை நான் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். ஹேமா கமிட்டி அறிக்கைக்கு முழு மலையாள சினிமாவும் பதிலளிக்க வேண்டும். எல்லாக் கேள்விகளும் அம்மா சங்கத்தை மட்டுமே நோக்கியவை என்பதை நாம் பார்க்கிறோம். எல்லா கேள்விகளுக்கும் அம்மா சங்கத்தால் பதில் சொல்ல முடியாது. இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்க வேண்டும். இது மிகவும் கடினமாக உழைக்கும் தொழில். இதில் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இதில் அனைவரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.
'No Power Group': Mammootty Speaks Out on Justice Hema Report | Watch
மலையாள திரையுலகின் மற்றொரு உச்ச நடிகருமான மம்முட்டியும், ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் குறித்து மௌனம் கலைத்தார். ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்ற அவர், தொழில்துறையை வேலை செய்வதற்கான சிறந்த இடமாக மாற்ற சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்
Actress Sharada
இந்த அறிக்கையை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் மீதும் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் பாலியல் புகார்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகையும், ஹேமா கமிட்டியின் உறுப்பினருமான சாரதா இதுகுறித்து முதன்முறையாக பிரபல சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அனைவரும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, வயநாடு பேரழிவு குறித்து பேச வேண்டும் என்று கூறினார்.
திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் எப்போதுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எங்கள் காலக்கட்டத்தில் இருந்த நடிகைகள் பயத்தாலும் பெருமையாலும் அதை வெளியே சொல்லவில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர் படித்தவர்களாக இருப்பதால் தைரியமாக இதுகுறித்து பேசுகின்றனர்.
இதுபோன்ற தொல்லைகளை தான் அனுபவித்ததில்லை என்றாலும், படப்பிடிப்பில் பெண்கள் மோசமான அனுபவங்களைப் பற்றி பேசுவதைக் கேட்டிருப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பின்பு தற்போது வெளியாகி வரும் தகவல்கள் வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே. 5 அல்லது 6 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது எனக்கு நியாமில்லை.