- Home
- Cinema
- Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Actress Savitri Last Words : நடிகையர் திலகம் சாவித்திரி இறப்பதற்கு முன்பாக தனது தோழியிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் தான் செய்த பெரிய தவறு என்ன என்பதையும் அவர் மனம் திறந்து கூறியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி காலம்
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கோலோச்சியவர் நடிகை சாவித்திரி. இவர் நடிகையர் திலகம் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவருடைய நடிப்பு திறமையால் பல லட்சம் ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் சாவித்திரியின் இறுதி காலம் என்பது மிகவும் மோசமாக அமைந்தது. அவர் மிகுந்த வேதனையுடன் தனது இறுதி காலத்தை கழித்தார். இறுதி நாட்களில் பட்ட கஷ்டங்கள் குறித்து தனது தோழிகளிடம் அவர் சில விஷயங்களை கூறி அழுது இருக்கிறார். தான் செய்த தவறு என்ன என்பதையும் அப்போது அவர் உணர்ந்து பேசியிருக்கிறார். இது குறித்து சாவித்திரியின் நெருங்கிய தோழியான மத்தாலி சுசீலா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மத்தாலி சுசீலா - சாவித்திரி நட்பு
மத்தாலி சுசீலா சாவித்திரியின் நெருங்கிய தோழி ஆவார். இவர் அளித்த பேட்டியில், “விஜயவாடாவில் உள்ள நடனப் பள்ளியில் முதன்முதலில் சாவித்திரியை சந்தித்தேன். சாவித்திரி தாமதமாக வகுப்பில் சேர்ந்ததால் அவருக்கு அடிப்படைகளை கற்றுக் கொடுக்குமாறு ஆசிரியர் என்னிடம் கூறினார். அப்போது சாவித்திரிக்கும் எனக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. சாவித்திரி தொலைவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். எனவே அவரை என்னுடைய வீட்டிற்கு வந்து பயிற்சி செய்யுமாறு கூறினேன். அப்போது எங்களுக்குள் நட்பில் அதிக நெருக்கம் ஏற்பட்டது. சாவித்திரி என்னை மெட்ராஸில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
இறுதி நாட்களில் சாவித்திரி பகிர்ந்த விஷயம்
மேலும் தனக்கு திரைத் துறையில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியிருந்தார். ஆனால் என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தை பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் நான் அவற்றை ஏற்கவில்லை. திரைப்பட வாய்ப்பை நிராகரித்ததால் சாவித்திரி என்னிடம் சரியாக பேசவில்லை. ஆனால் பின்னாளில் நான் எடுத்த முடிவு சரியானது என் சாவித்திரி உணர்ந்தார். சாவித்திரி தனது இறுதி கட்டத்தில் தன்னிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நீ என்னுடன் திரைத்துறைக்கு வராததற்கு முதலில் கோபப்பட்டேன். ஆனால் நீ வராததே நல்லது தான். நான் கோடிகளை சம்பாதித்தாலும்ஔ என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனக்கு துளியும் சந்தோஷம் இல்லை.
அனாதையாக மரணித்த சாவித்திரி
என்னுடைய கணவர் என்னை கண்டு கொள்வதில்லை. எனக்கு பிடித்ததை சாப்பிட முடியவில்லை. எனக்கு பிடித்த புடவைகளை கட்டிக் கொள்ள முடியவில்லை. நான் அனாதையாக உணர்கிறேன். நீயாவது கணவன் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாய். அது போதும் என்று கண்ணீருடன் கூறி இருக்கிறார். சாவித்திரியின் இந்த வார்த்தைகளை கேட்டு கண்ணீரை கட்டுப்படுத்த முடியமால் சுசீலா கதறி அழுதுள்ளார். ஜெமினி கணேசனை திருமணம் செய்ய வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் சாவித்திரி கேட்கவில்லை என்று சுசீலா அந்த பேட்டியில் வருத்தத்துடன் கூறினார்.
கொடிய இறப்பை எதிர்கொண்ட சாவித்திரி
மேலும் சாவித்திரியின் கடைசி காலத்தில் அவளின் நிலைமையை பார்த்து மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் கைநிறைய சம்பாதித்தாள். பல ரசிகர்களை பெற்றாள். ஆனால் கடைசியில் எதுவும் இல்லாமல், யாரும் இல்லாமல், அனாதையாக போய்விட்டாள் என்று சுசீலா தனது வேதனையை வெளிப்படுத்தினார். தனது நடிப்பு திறமையால் லட்சோப லட்ச ரசிகர்களையும் கட்டி வைத்திருந்த சாவித்திரியின் இறப்பு என்பது கொடியதிலும் கொடியதாகிப் போனது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

