- Home
- Cinema
- Sanam Shetty: படுக்கைக்கு அழைக்கிறார்கள்; 10 பேருடன் அப்படி இருப்பது தான் சம உரிமையா? சனம் ஷெட்டி ஆவேசம்!
Sanam Shetty: படுக்கைக்கு அழைக்கிறார்கள்; 10 பேருடன் அப்படி இருப்பது தான் சம உரிமையா? சனம் ஷெட்டி ஆவேசம்!
நடிகை சனம் ஷெட்டி, பேட் கேர்ள் திரைப்படம் பற்றியும் சினிமாவில் நடிகர்களுக்கும் - நடிகைகளுக்கும் சம உரிமை கொடுக்கப்படுவது இல்லை என்பது பற்றியும் பேசியுள்ளார்.

பேட் கேர்ள் படம் குறித்து சனம் ஷெட்டி:
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யாப் வழங்க, வெற்றிமாறனின் துணை இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படம் பற்றி ஆவேசமாக பேசியுள்ளார் நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி.
அம்புலி படம் மூலமா தமிழ் சினிமாவுல அறிமுகம் ஆனவங்க தான் சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து, மலையாள படங்களில் நடித்தார் சனம் ஷெட்டி. அதே போல் தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் எதுவும் இவருக்கு பெரிதாக வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.
பிக்பாஸ் சீசன் 3:
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பை ஏற்படுத்திய சனம் ஷெட்டி, பின்னர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியது பேசுபொருளாக மாறியது. இதன் பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவரே போட்டியாளராக களமிறங்கினார். மிகவும் நேர்மையாக விளையாடிய போதும், இவரின் முந்திரிக்கொட்டை தனம் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை வரவைத்து.
பாலியல் கொடுமை; நடிகை சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
இது தான் பெண்களின் சம உரிமையா?
தற்போது தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ள இவர், அதில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், 'பேட் கேர்ள்' படம் பற்றி இவர் பேசியபோது, பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பது தான் பெண்களுக்கான சம உரிமையா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
சினிமாவில் நடிகர் - நடிகைகளுக்கு சம உரிமை இல்லை:
தொடர்ந்து பேசிய இவர், "சம உரிமை என்பது, பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன் , கஞ்சா அடிப்பேன் என்பதல்ல. ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பது தான் உண்மையான சம உரிமை. ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இந்த சமூகத்தில் சமமாக வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா என்றால் அது ? இல்லை. சினிமாவை பொறுத்தவரை, ஹீரோவுக்கு கொடுக்கப்படும் சம்பளமும், ஹீரோயின்களுக்கு சம்பளமும், கொடுக்கப்படும் சம்பளமும் ஒன்று இல்லை.
நிலைமை இப்படித்தான் இருக்கிறது:
அதே போல் எப்போதும், ஒரு ஹீரோவை அணுகும் விதமும், ஒரு ஹீரோயினை அணுகும் விதமும் ஒன்றாக இருப்பது இல்லை. என் வாழ்க்கையில் எனக்கு நேர்ந்ததை வைத்து சொல்கிறேன். எங்களை படங்களில் நடிக்க அழைக்கிறார்கள் என்று பார்த்தால், படுக்கவும் அழைக்கிறார்கள். நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
எனவே சம உரிமை வேண்டும். இதைப் பற்றியே பேசுங்கள். ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து பத்து பேருடன் படு, கஞ்சா அடி, தம் அடி என்று சொல்வதை சம உரிமை இல்லை என கூறியுள்ளார். குறிப்பாக இப்படி ஒரு மோசமான படத்தை பெரிய மனிதர்கள் பாராட்டுவது தான் தாங்க முடியாத ஒன்று என பெய்சியுள்ளார்.