Samantha Photos: உடல் மெலிந்து போன சமந்தா... சோகம் தள்ளாடும் முகத்துடன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!
நடிகை சமந்தா தற்போது மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், ஏர்போர்ட்டில் இவர் நடந்து வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகும், தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கலாம் என பல இளம் நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறியவர் சமந்தா.
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், விக்ரம், தனுஷ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சுமார் ஏழு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்த சமந்தா, தன்னுடைய இல்லற வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு காட்டியவர்.
மிகவும் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அதிரடியாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது வரை, இவர்களுடைய பிரிவு குறித்து, இருவருமே வெளிப்படையாக பேசியதே இல்லை என்பதால் இவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
'துணிவு' படத்திற்காக மஞ்சு வாரியருக்கு ஜெட் ஸ்கை பயிற்சி கொடுத்த அஜித்..! அவரே பகிர்துகொண்ட தகவல்!
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார் சமந்தா. அதேபோல் நாக சைதன்யாவும் தற்போது, திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு மயோசிட்டிஸ் எனப்படும் அரிய வகை தசை அழிச்சி நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
8 வருட காத்திருப்புக்கு பின்பெற்றோரான சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் - ஸ்ரீஜா! குவியும் வாழ்த்து!
சமீபத்தில் வெளியான தகவலின் படி சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே செல்வதாகவும், எதிர்பார்த்ததை விட சிகிச்சைக்கான நாட்கள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமந்தா மும்பை ஏர்போர்ட்டில் நடந்து வந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளை நிற சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து வெளியுலகிற்கு சமந்தா வந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு, மிகவும் மெலிந்து காணப்படுகிறார். முகத்தில் சிரிப்பின்றி சோகமாக இருக்கிறார் இந்த புகைப்படங்கள் தான் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!