MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரியவகை நோய் பாதிப்பால் அமெரிக்க பயணமா?... தீயாய் பரவும் தகவல் - பதறிபோய் சமந்தா தரப்பு கொடுத்த விளக்கம்

அரியவகை நோய் பாதிப்பால் அமெரிக்க பயணமா?... தீயாய் பரவும் தகவல் - பதறிபோய் சமந்தா தரப்பு கொடுத்த விளக்கம்

samantha : நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 21 2022, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் படு பிசியாகிவிட்டார். தற்போது அவர் கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் 2 படம், கோலிவுட்டில் 2 படம் என நார்த் முதல் சவுத் வரை கைவசம் அரை டஜன் படங்களுடன் வலம் வருகிறார் சமந்தா.

24

இவற்றுள் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட சமந்தா, அடுத்ததாக குஷி படத்தில் பிசியாக நடித்து வந்தார். ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அமெரிக்கா கிளம்பி சென்றுவிட்டார் சமந்தா.

இதையும் படியுங்கள்... லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

34

அவரின் திடீர் அமெரிக்க பயணம் பல்வேறு யுகங்களை கிளப்பியது. அதன்படி அவருக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சமீப காலமாக சோசியல் மீடியாவில் எந்தவித பதிவுகளையும் போடாமல் அதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்ததாகவும், தற்போது அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

44

இந்நிலையில் நடிகை சமந்தா தரப்பில் இருந்து தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது மேனேஜர் மகேந்திரா என்பவர் கூறியதாவது: சமந்தா நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் எதற்காக அமெரிக்கா சென்றார் என்ற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது மாரடைப்பு... பிக்பாஸ் பிரபலம் சிகிச்சை பலனின்றி பலி - சோகத்தில் திரையுலகினர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
Latest Videos
Recommended Stories
Recommended image1
லஞ்சம் வாங்கிய செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீனாவுக்கு வந்த டவுட் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image2
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved