- Home
- Cinema
- Samantha : அவரே வேண்டாம்னு சொல்லிட்டேன்... அப்புறம் இது எதுக்கு! திருமண புடவையை திருப்பிக் கொடுத்த சமந்தா
Samantha : அவரே வேண்டாம்னு சொல்லிட்டேன்... அப்புறம் இது எதுக்கு! திருமண புடவையை திருப்பிக் கொடுத்த சமந்தா
samantha : விவாகரத்துக்கு பின் சினிமாவில் இவரது மார்கெட் எகிறி உள்ளது என்றே சொல்லலாம். தற்போது இவர் கைவசம் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடங்கிய சமந்தா, 11 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வெற்றிகரமான நடிகையாக நிலைத்து இருக்கிறார். நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு பிரபல டோலிவுட் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண உறவு கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமண முறிவுக்கு பின் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
விவாகரத்துக்கு பின் சினிமாவில் இவரது மார்கெட் எகிறி உள்ளது என்றே சொல்லலாம். தற்போது இவர் கைவசம் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர டோலிவுட்டில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள சமந்தா, பாலிவுட்டிலும் ஒரு வெப் தொடரில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்கிற வெளிநாட்டு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் விவாகரத்து குறித்த பதிவை சமந்தா நீக்கியதால், அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமந்தாவின் சமீபத்திய செயல் அமைந்துள்ளது.
அதன்படி, அவர் தனது திருமண புடவையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடமே மீண்டும் கொடுத்துவிட்டாராம். நாக சைதன்யா சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தன்னுடன் இருக்க வேண்டாம் என முடிவெடித்து சமந்தா இவ்வாறு செய்ததாக அவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஜாக்கி சான் பட சீனை அப்படியே ஆட்டையை போட்டு வலிமையில் வைத்த H Vinoth.. வீடியோ வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்