ஜாலியாக வெளிநாட்டில் விஜய் தேவரகொண்டா உடன் ஊர் சுற்றும் சமந்தா... வைரலாகும் குஷி ஜோடியின் கிளிக்ஸ்
சமந்தாவைப் போல் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் துருக்கியில் ஜாலியாக அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
மயோசிடிஸ் பிரச்சனையில் இருந்து சமந்தா மீண்டு வந்த பின்னர், இவர் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான 'சாகுந்தலம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மரண அடி வாங்கிய நிலையில், தோல்வி படம் குறித்து பெரிதாக அலட்டி கொள்ளாமல், அடுத்தடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.
அந்த வகையில் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வந்த குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில், சிட்டாடெல் என்கிற வெப் தொடரின் இந்திய பதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.
'சிட்டாடெல்' வெப் தொடர் ஆங்கிலத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ந் தேதி ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா இந்த தொடரின் இந்திய பதிப்பில் நடித்து வருவதால், இந்த வெப் தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமந்தா, ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மிகவும் ஸ்டைலிஷான லாங் மேக்சி அவுட் பிட்டில் புல்வெளியில் படுத்திருக்கும் ஒற்றை புகைப்படத்தை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமந்தாவைப் போல் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் துருக்கியில் ஜாலியாக அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இருவரும் குஷி படத்தின் படப்பிடிப்பிற்காக துருக்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் பாரதிராஜா இயக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து! அதிஷ்டவசமாக உயிர் தம்பிய 5 பேர்!