- Home
- Cinema
- மாதவிடாய் நாட்களில் நடனம்... ரவுடி பேபி பாடலின் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம்திறந்த சாய்பல்லவி
மாதவிடாய் நாட்களில் நடனம்... ரவுடி பேபி பாடலின் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம்திறந்த சாய்பல்லவி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, நடனமாடும் போது இருக்கும் சவால்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, இதையடுத்து தமிழில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், அடுத்ததாக தெலுங்கு திரையுலகம் பக்கம் ஒதுங்கினார். அங்கு இவர் நடித்த படங்களெல்லாம் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் சாய் பல்லவி.
இதையும் படியுங்கள்... காதல் மனைவி நஸ்ரியா உடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய பகத் பாசில் - வைரலாகும் போட்டோஸ்
அண்மையில் இவர் நடிப்பில் விராட பருவம் திரைப்படம் ரிலீசானது. இதுதவிர தமிழில் இவர் கைவசம் கார்கி என்கிற திரைப்படம் உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது. இதுதவிர கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் கமிட் ஆகி உள்ளார் சாய் பல்லவி.
இதையும் படியுங்கள்... நடிகர் பிரபுதேவாவுக்கு இவ்வளவு பெரிய மகனா...! தாடி மீசையுடன் அச்சு அசல் தந்தை போலவே இருக்கும் போட்டோ வைரல்
மாவீரன் என பெயரிடப்பட்டு உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் நடனமாடும் போது இருக்கும் சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... உதயநிதி மகனுக்கு திடீரென வந்த ஹீரோ ஆசை.. தந்தை ரூட்டில் செல்கிறாரா இன்பநிதி? - கிருத்திகா சொன்ன சுவாரஸ்ய தகவல்
மாதவிடாய் நாட்களில் தான் மாரி படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலில் நடனமாடியதாக தெரிவித்துள்ள சாய் பல்லவி. அந்த பிரச்சனையையும் தாண்டி நடனமாடியதனால் தான் அப்பாடல் இன்று பல மில்லியன் பார்வைகளைக் கடந்து கொண்டாட வைத்துள்ளது. ஷியாம் ஷிங்கா ராய் படம் தவிர நான் நடித்த அனைத்து படங்களிலும் நடனக் காட்சி படமாக்கப்பட்டபோது எனக்கு மாதவிடாய் நாட்களாகத்தான் இருந்துள்ளது. அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கேற்றார் போல் தனது உடலை தயார்படுத்திக் கொண்டு நடித்ததாக சாய்பல்லவி கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.