- Home
- Cinema
- Sai Pallavi : சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு விவசாயம் பார்க்க சென்ற நடிகை சாய் பல்லவி - வைரலாகும் போட்டோஸ்
Sai Pallavi : சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு விவசாயம் பார்க்க சென்ற நடிகை சாய் பல்லவி - வைரலாகும் போட்டோஸ்
Sai Pallavi : உகாதி திருவிழா நேற்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை நடிகை சாய் பல்லவி சற்று வித்தியாசமாக கொண்டாடி உள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. தமிழிலும் பிரேமம் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாய் பல்லவி.
இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்த அவர், பின்னர் செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.
பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் கூட இவர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்த ஷ்யாம் ஷிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் விராட பருவம் திரைப்படம் தயாராகி உள்ளது. ராணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை பிரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், உகாதி திருவிழா நேற்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை நடிகை சாய் பல்லவி சற்று வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். அவர் விவசாயம் செய்யும் பெண்களுடன் கிழங்குகளை அறுவடை செய்து இப்பண்டிகையை கொண்டாடி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அடுத்த டிரைலருக்கு ரெடியா! புது போஸ்டருடன் பீஸ்ட் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - எப்போ ரிலீஸ் தெரியுமா?