வேதனையாக இருக்கிறது.. எப்போதும் நான் ஸ்டுடென்ட்ஸ் பக்கம் தான்!! நீட் தேர்வு குறித்து பேசிய சாய் பல்லவி!!
நீட் தேர்வு (Neet Exam ) காரணமாக, ஒரு சில மாணவர்கள் அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், பலரும் நீட் தேர்வு குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் சூர்யா (Suriya) உணர்வு பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரை தொடர்ந்து பிரபல நடிகையும், மருத்துவருமான சாய் பல்லவி (Sai Pallavi) நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கு கடந்த சில வருடங்களாக, நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என, பிரபலங்கள் முதல் பல்வேறு அரசியல் கட்சியும் மத்திய அரசை வலியுறுத்தி வருவது நாம் அறிந்தது.
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிராக போர் குரல் பல்வேறு மாவட்டங்களிலும் ஒலித்து வருகிறது என்றால், மாணவர்கள் சிலர்... எப்படி இந்த தேர்வை எதிர்கொள்வோம் என்கிற அச்சத்திலும், நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்திலும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
எதற்குமே தற்கொலை தீர்வு அல்ல என, தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நடிகர்கள், அரசியல் வாதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தாலும் மாணவர்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை.
சமீபத்தில் நடிகர் சூர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் மிகவும் உணர்வு பூர்வமாக கண் கலங்கி பேசி இருந்தார். ஒரு தேர்வு நம் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதையும் வலியுறுத்தினார்.
இவரை தொடர்ந்து, நடிகையும் மருத்துவருமான சாய் பல்லவி ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார்.
அதில் சாய் பல்லவி கூறியுள்ளதாவது. மருத்துவப் படிப்பு கடல் போன்றது. இதில் இருந்து எப்படி கேள்விகள் கேப்பார்கள் என்பதை நாம் யோசித்து கூட பார்க்கமுடியாது. இதன் காரணமாகவே மாணவர்கள் மனதளவில் பாதிக்க கூடும், இது போன்ற நேரங்களில் மாணவர்களுக்கு அவர்களது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்னுடைய குடும்பத்திலேயே ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக தற்கொலை செய்து கொண்டார், தயவு செய்து தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் இது உங்களுடைய குடும்பத்தை ஏமாற்றும் செயல்.
ఇక తాను నటిస్తున్న విరాటపర్వం,శ్యామ్ సింగ రాయ్ చిత్రాల షూటింగ్ పూర్తయింది అని సాయి పల్లవి తెలిపింది. పోస్ట్ ప్రొడక్షన్ కార్యక్రమాలు జరుగుతున్నాయని పేర్కొంది.