விஜய் சொன்ன ஒற்றை வார்த்தையை கேட்டு... நடிப்புக்கே கும்பிடு போட்ட ரோஜா!
Actress Roja Who Gave Up Acting: நடிகை ரோஜா நடிப்பை விட்டு விலகியதற்கு, தளபதி விஜய் சொன்ன அந்த வார்த்தை தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை ரோஜா:
தமிழ் சினிமாவில் 90-களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவரை தமிழில் அறிமுகம் செய்தவர், ரோஜாவின் காதல் கணவரான ஆர்.கே.செல்வமணி தான். 1992-ஆம் ஆனது பிரசாந்தை வைத்து தான் இயக்கிய காதல் படமான 'செம்பருத்தி' படம் தான் ரோஜாவின் முதல் படமாக அமைந்தது.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி:
இந்த படத்தை தொடர்ந்து, 90-களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், அஜித், பிரபுதேவா, போன்ற பலருடன் நடித்துள்ளார். அதே போல் தெலுங்கிலும், வெங்கடேஷ், சிரஞ்சீவி, பாலையா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆர்.கே.செல்வமணியுடன் நீண்ட நாள் காதலில் இருந்த ரோஜா, பின்னர் அவரையே 2002-ஆம் ஆனது திருமணம் செய்து கொண்டார்.
அம்மாவாக நடிக்க தொடங்கிய ரோஜா:
தற்போது ரோஜா - செல்வமணி தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ரோஜாவுக்கு அக்கா, அண்ணி, போன்ற வேடங்களே கிடைத்தன. பின்னர் அதுவே அம்மாவிடமாக மாறியது. சில இளம் கதாநாயகிகளுக்கு ரோஜா அம்மாவாகவும் நடித்துள்ளார்.
விஜய் சொன்ன வார்த்தை:
அப்படிதான், விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'துப்பாக்கி' படத்தில் ரோஜா காஜல் அகர்வாலுக்கு அம்மாவாக நடிக்க கமிட் ஆகி இருந்தாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோஜாவை பார்த்ததும், "என்ன மேடம் நீங்க அம்மாவா நடிக்கிறீங்களா? என கேட்டுள்ளார். இதற்கு ரோஜா ஆமாம் என கூற... உங்களை நான் இப்போதும் ஹீரோயினாக தான் பார்க்கிறேன். எனக்கு மாமியார் ரோலில் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என கூறியுள்ளார்.
அரசியல் பிரவேசம்:
விஜய் சொன்ன இந்த வார்த்தையை கேட்டு, ரோஜா, இந்த படத்தை விட்டு மட்டும் அல்ல... இனி இப்படி நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்து விட்டாராம். பின்னர் முழு நேர அரசியலில் இறங்கிய ரோஜா. 1998 -ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி (TDP) மூலம் அரசியலில் நுழைந்து முதலில் மகளிரணி தலைவராக இருந்த இவர் பின்னர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSR Congress) கட்சியில் இணைந்தார். 2014, 2019 சட்டமன்ற தேர்தல்களில் - நகரி தொகுதி (Andhra Pradesh) சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். சுற்றுலா, இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார் ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.