நடிகை ரியா குமாரி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்! கணவர் அதிரடி கைது..!
வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை ரியா குமாரி வழக்கில், திடீர் திருப்பமாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை ரியா குமாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் அவருடைய கணவர் கண் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தகவல், திரையுலகினர் மத்தியிலும்... ரசிகர்கள் மத்தியிலும்... அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரியா குமாரி தனது கணவர் மற்றும் மகளுடன் கொல்கத்தாவிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது அவருடைய காரை வழிமறைத்த மூன்று மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளை அடித்தது மட்டுமின்றி ரியா குமாரி பொருட்களை கொடுக்க முரண்டு பிடித்ததால், அவரை துப்பாக்கியில் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
பின்னர் ரியா குமாரியின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடிகை மற்றும் அவரின் கணவரிடம் இருந்து வழிப்பறி செய்து தப்பி சென்ற மூன்று கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
மேலும் ரியாகுமாரியின் பெற்றோர், நடிகை ரியா குமாரியின் கணவர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் கூறிய நிலையில்... சந்தேகத்தின் பேரில் ரியாகுமாரியின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சில முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படும் நிலையில், அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர்.
தற்போது சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், உண்மையிலேயே ரியா குமாரியின் கணவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.