ஆண்கள் இடுப்பை தொட்டால் என்ஜாய் பண்ண சொன்னேனா? சர்ச்சை கருத்து குறித்து ரேகா நாயர் விளக்கம்..
பெண்கள் உடையணிவது பற்றிய சர்ச்சை கருத்துக்கு ரேகா நாயர் விளக்கம் அளித்துள்ளார்.
தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான ரேகாநாயர் வம்சம், பகல்நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் பயில்வான் ரங்கநாதன் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியிருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில் பேசிய அவர் ” பெண்கள் அணியும் உடை தான் அனைத்திற்கும் காரணம்.. நான் இப்போது புடவை அணிந்து வந்திருக்கிறேன். நான் கையை தூக்கினால் என் இடை தெரியும். அதே போல் பேருந்தில் செல்லும் போது சில உடைகளை அணிந்து சென்றால், சில ஆண்கள் தொட்டால் பெண்கள் அனுபவிக்க தான் வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை கிளப்பியது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் ஆண்களின் அத்துமீறலுக்கு பெண்களின் உடையை குறை சொல்வது என்றும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டே ரேகாநாயர் இப்படி பேசலாமா எனவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விவாகரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல.. அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகையின் கணவர்!
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ரேகா நாயர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆசையில் தொடுவதற்கும், வேறு மாதிரி தொடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆண் இருக்கும் பேருந்தில் உடல் பாகம் தெரியும் படி ஒரு பெண் உடையணிந்திருக்கும் போது, ஒரு ஆண் தெரிந்தோ தெரியாமலோ அவளை தொடும் போது அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அவன் எந்த நோக்கத்தில் அதை செய்கிறான் என்று உணர்வதற்காக சொன்னேன். உங்களிடம் அவன் தவறாக நடந்தால், கோழி கழுத்தை திருவுவது போல் அவனை திருவி போடலாம். ஆனால் நீங்கள் ஆடையை தவறாக அணிவீர்கள், ஆண்களை குற்றம் சொல்வீர்கள்.. அது தவறு என்று சொன்னதால் என்னை பூமர் ஆண்ட்டி என்று சொன்னார்கள்.
ஆம்பளைங்க இடுப்புல கை வச்சா அனுபவிக்கனும்... பெண்களுக்கு ரேகா நாயர் அட்வைஸ்
rekha nair
மார்பிலிருந்து சேலை வில்கினாலோ அல்லது இடுப்பு தெரிந்தாலோ அதற்கான பாதுகாப்பான மனநிலையில் இருந்தால் பேருந்தில் பயணிக்க வேண்டும். அப்படி இல்லை எனில், நான் வேறு எதிலாவது செல்ல வேண்டும். பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள சக்தி எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தகுதி எனக்கு இருக்க வேண்டும்.
rekha nair
ஒருவன் நம்மை பார்க்கும்போதே, அவன் எந்த விதத்தில் நம்மை பார்க்கிறான் என்பது நமக்கு தெரிந்துவிடும். அதைத்தான் நான் சொன்னேன். மொத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் நான் சொன்னேன். இந்த அர்த்தத்தில் சொன்னதை சில யூடியூப் சேனல்கள் தவறாக சித்தரித்து போட்டுவிட்டார்கள்..” என்று தெரிவித்தார்.