விவாகரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல.. அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகையின் கணவர்!
சிரஞ்சீவி குடும்பத்து பெண்ணும், நடிகையுமான நிஹாரிகாவும், சைதன்யா ஜொன்னலகட்டாவும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்த்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் கசிந்துள்ளது.
Niharika and Chaitanya Marriage
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் நிஹாரிகாவுக்கும் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ப்பூரில் உள்ள உதய்பூர் அரண்மனையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக எடுத்து கொள்ளும் போட்டோஸ், வீடியோஸ் போன்றவற்றை வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.
Niharika divorce
யார் கண் பட்டதோ..? திருமணமான இரண்டே வருடத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய பிரச்சனையாக வெடிக்க, ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரியும் முடிவுக்கு இருவருமே வந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Both Are concentrate Own life
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்துக்கு பின்னர் நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது பிஸியாகி உள்ளனர்.
Niharika Acting and Produced Web series
குறிப்பாக நிஹாரிகா திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவர் தனது பேனரில் வெப் சீரிஸையும் தயாரித்து வருகிறார். அதே போல் சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆகிட்டிவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Jovika: அழுது கொண்டே ஜோவிகா சொன்ன விஷயம்! கை தட்டி உற்சாக படுத்திய ஹவுஸ் மேட்ஸ்.. எமோஷ்னல் வீடியோ!
Chaitanya Second Marriage:
இந்நிலையில் தெலுங்கு மீடியாக்களில் நிஹாரிகாவின் கணவர் சைதன்யா பற்றிய ஒரு தகவல் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிஹாரிகாவுடன் சைதன்யாவுக்கு விவாகரத்து ஆகி விட்டதால் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதில் ஆவது குடும்பத்தினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், அவருக்கு சில பெரிய குடும்பத்து பெண்களை கட்டி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.