சக நடிகரை ரகசிய திருமணம் செய்ததாக வதந்தி.. ஆண்களை மேகி நூடுல்ஸ் உடன் ஒப்பிட்ட சர்ச்சை நாயகி!
அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது கடந்தகால உறவுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தன்னை ஒரு சீரியல் டேட்டர் என்று அவரே கூறியுள்ளார்.
Actress
அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது கடந்தகால உறவுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தன்னை ஒரு சீரியல் டேட்டர் என்று அவரே கூறியுள்ளார்.. ஒருமுறை அவர் தனது சக நடிகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது. அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை ரெஜினா கசாண்ட்ரா தான்.
சென்னையைச் சேர்ந்த ரெஜினா, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தனது 9 வயதில், ஒரு குழந்தைகள் சேனலில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கிய அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
Regina Cassandra
2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு, ரெஜினா பல்வேறு மொழிகளில் சில படங்களில் பணியாற்றினார், பின்னர் தனது கல்வியை முடிக்க படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.
அவரது குறுகிய கால இடைவெளியில் கூட, ரெஜினி குறும்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் ரெஜினா. 2013-ம் ஆண்டு தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்தர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
Regina Cassandra
ரெஜினாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது "சுப்பிரமணியம் ஃபார் சேல்" என்ற தெலுங்கு படம். இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்தார்.
தமிழில் மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரெஜினா சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
Regina Cassandra
தனது திரை வாழ்க்கையை தவிர, அவ்வபோது தனது கருத்துகளின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். உதாரணமாக, தான் ஒரு சீரியல் டேட்டர் என்று ரெஜினா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். மேலும் "எனக்கு பல திருமண புரபோசல்கள் வருகின்றன. என் வாழ்க்கையில் நான் பல உறவுகளில் இருந்திருக்கிறேன். நீங்கள் என்னை சீரியல் டேட்டர் என்று அழைக்கலாம். நான் டேட்டிங் செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால் இப்போது நான் ஒரு இடைவெளி எடுத்து வருகிறேன்." என்று கூறினார்.
Regina Cassandra
ரெஜினா ஒருமுறை ஆண்களை மேகி நூடுல்ஸுடன் ஒப்பிட்டார். தனது ஒரு படத்தை விளம்பரப்படுத்தும் போது, "பாய்ஸ் மற்றும் மேகி நூடுல்ஸ்-க்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்..
Regina Cassandra
மாநகரம் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகரான சந்தீப் கிஷனை ரெஜினா ரகசியமாக திருமணம் செய்ததாக வதந்தி பரவியது. இதையெல்லாம் நிராகரித்த ரெஜினா, அவர்கள் வெறும் நல்ல நண்பர்கள் என்றும், அவர்களில் யாரையாவது திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிடுவது ஆதாரமற்றது என்றும் கூறியிருந்தார்.
ரெஜினா தற்போது ஜாட், செக்ஷன் 108 ஆகிய ஹிந்தி படங்களிலும், ஃபிளாஷ்பேக் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.