தம்பியை அடுத்து அண்ணனுடன் ஜோடி போடும் பிரபல நடிகை... எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு...!
அதேபோல் சூர்யாவையும் தங்களது படத்தில் தட்டித்தூக்க இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர்.
சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த இன்ஸ்பிரேஷன் திரைப்படங்களிலேயே இது தான் சூப்பர் என்றும், சூர்யாவின் நடிப்பிற்கு ஈடு இணையே இல்லை என்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சுதா கொங்கராவிற்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சூர்யாவையும் தங்களது படத்தில் தட்டித்தூக்க இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர்.
தற்போது அந்த வாய்ப்பு இயக்குநர் பாண்டியராஜனுக்கு கிடைத்துள்ளது. அவர் உடனடியாக சூர்யா பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையும், கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள சுல்தான் பட நாயகியுமான ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.