- Home
- Cinema
- 364 நாள் கோமா-ல இருந்தியா?... பாசத்தோடு போட்டோ போட்ட காதலனை பங்கமாக கலாய்த்த பிரியா பவானி சங்கர்
364 நாள் கோமா-ல இருந்தியா?... பாசத்தோடு போட்டோ போட்ட காதலனை பங்கமாக கலாய்த்த பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கருக்கு (Priya Bhavani Shankar) பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுக்காகவே இன்ஸ்டா அக்கவுண்ட் வச்சிருப்பாரு போல என ராஜவேலுவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார்.
இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான 'மேயாதமான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை ரத்ன குமார் இயக்கி இருந்த
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.
தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அருண் விஜய் ஜோடியாக யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் குறித்து அவரது காதலர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ள பிரியா பவானி சங்கர் “364 நாள் கோமால இருந்துட்டு இன்னைக்கு மட்டும் ஆக்டிவ் ஆயிடுவான்” என கிண்டலடித்துள்ளார்.
அவர் இப்படி கிண்டலடித்தது ஏன் தெரியுமா, அவரின் காதலன் ராஜவேலுவின் இதற்கு முந்தைய பதிவு கடந்தாண்டு டிசம்பர் 31-ந் தேதி போட்டுள்ளார். பிரியா பவானி சங்கருடன் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், பிரியா பவானி சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுக்காகவே இன்ஸ்டா அக்கவுண்ட் வச்சிருப்பாரு போல என கலாய்த்து வருகின்றனர்.