செம க்யூட்.. அழகிகளே பொறாமைப்படும் பேரழகு.. பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செய்திவாசிப்பாளராக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறி உள்ளார் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
priya bhavani shankar
அறிமுக இயக்குனர் ரத்தின குமார் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிகுமகானார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த இப்படத்தில் வைபவ்-க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரியாவுக்கு கிடைத்தது.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், மாஃபியா, ருத்ரன், பொம்மை, பத்து தல என பல படங்களில் நடித்தார்.
மேலும் டிமாண்டி காலனி 2, இந்தியன் 2 என பல படங்களில் நடித்து வருகிறார். இது தவிர சில தெலுங்களில் படங்களிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்திலும் பிரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடக்க உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரியா அஜர்பைஜானில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி சங்கரின் வேறு சில புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.