யம்மாடியோ ரூ.30 கோடிக்கு பரிசா..! திருமணம் முடிந்ததும் நடிகை பூர்ணாவுக்கு பரிசுகளை வாரி வழங்கிய கணவர்
திருமணம் முடிந்த கையோடு நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் ஆசிப் அலி கோடிக்கணக்கில் பல்வேறு பரிசுகளை வாரி வழங்கி உள்ளார்.
மலையாள நடிகையான பூர்ணா, தமிழில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கந்தக்கோட்டை, காப்பான், சவரக்கத்தி என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா. இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகை பூர்ணாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... லவ் டுடே வசூலில் பாதிகூட கிடைக்கல... பரிதாப நிலையில் ‘காஃபி வித் காதல்’ - 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணா. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் ஆசிப் அலி கோடிக்கணக்கில் பல்வேறு பரிசுகளை வாரி வழங்கி உள்ளார்.
அதன்படி பூர்ணாவுக்காக தான் பார்த்து பார்த்து கட்டிய ரூ.25 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றை பரிசாக வழங்கி உள்ள ஆசிப் அலி, அதுமட்டுமின்றி ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி நடிகை பூர்ணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன் - விக்கி ஜோடி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்து நடிகை சமந்தா சொன்ன ‘நச்’ கருத்து