Actress pooja hegde : மெல்ல மெல்ல குணமடையும் பூஜா ஹெக்டே ...போட்டோவை பார்த்து வாழ்த்து சொன்ன ரசிகர்கள்
கால்களில் தற்போது தான் குணமடைந்து வருவதாக புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.
Pooja Hegde
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் அதிக பிரபலம்.
ஆனால் முகமூடி என்னும் படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படம் கை கொடுக்காத நிலையில் அவரது தெலுங்கு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 2012 ஆம் ஆண்டு தமிழில் நாயகியாக தோன்றிய இவர் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு விஜயின் பீஸ்ட் படம் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்த படத்தில் இவரின் ஆட்டமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது. வரவேற்பு அதிகரிக்க எங்கு போனாலும் பூஜாவிற்கு ஏகபோக வாழ்த்துக்களையும் குவித்து வந்தனர் ரசிகர்கள். ஒரே ஆண்டில் பீஸ்ட், ஆச்சார்யா , ராதே ஷ்யாம், எப் 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி இவரை முன்னணி நாயகிகளில் ஒருவர் ஆக்கிவிட்டது.
மேலும் செய்திகளுக்கு...kollywood celebrities : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்...யாரெல்லாம் தெரியுமா?
விருது விழாக்களிலும் ரெட் கார்பெட் விருந்துகளிலும் கலந்து கொண்டு கலக்கி வந்துள்ளார் பூஜா. தற்போது சர்க்கஸ் உள்ளிட்ட பாலிவுட் படத்திங்கள், மகேஷ்பாபுவின் 28 வது படத்திலும் நடித்து வருகிறார். அதோடு பல விருதுகளையும் தன் கைவசம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்தது.
நாயகிக்கு வரவேற்பு கிடைத்த போதிலும் படங்களுக்கு கலமையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் பிளாக் நாயகி லிஸ்ட்டில் இடம் பெறுவார் என பலரும் விமர்சித்தனர். தற்போது மேலும் தனது நடிப்பையும் கவர்ச்சியும் மெருகேற்றி முன்னணி நாயகி இடத்தை தக்க வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.
மேலும் செய்திகளுக்கு...செம்ம கியூட்..! குழந்தை பெற்றெடுத்த பின் வைரலாகும்... ஆலியா பட்டின் சிறிய வயது ரேர் வீடியோஸ் மற்றும் போட்டோஸ்!
சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அதாவது தனது காலில் கட்டுடன் அமர்ந்திருந்தார் பூஜா ஹேக்டே. தனக்கு அடிபட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
Pooja Hegde
இதை எடுத்து சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்தபடி சுடுதண்ணி பாக்கெட்டில் கால் வைத்திருந்த பூஜா. தான் மீண்டும் குணமடைந்து வருவதாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.