kollywood celebrities : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்...யாரெல்லாம் தெரியுமா?
சின்னத்திரை என்பது வெள்ளித்திரையை காட்டிலும் அதிக பிரபலத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி, தற்போது ஸ்டார்களாக ஜொலித்து வரும் சிலர் குறித்த தகவலையும் காணலாம்.
சிவகார்த்திகேயன் :
முதலிடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஸ்டாண்ட் அப் காமெடியனாக விஜய் டிவியில் தனது பயணத்தை துவங்கியவர். பிரபல தொகுப்பாளராக இருந்தார். கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக வந்து பிரபல விஜேவாக மாறிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழக சினிமாவுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அதோடு தெலுங்கு சினிமாவிலும் இவர் தன் தடங்களை பதித்து விட்டார் என்றே கூறலாம்.
harish kalyan
ஹரிஷ் கல்யாண் :
சிந்து சமவெளி என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்ததென்றால் அது பிக் பாஸ் ரியாலிட்டி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற இவருக்கு பியார் பிரேமா காதல் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...செம்ம கியூட்..! குழந்தை பெற்றெடுத்த பின் வைரலாகும்... ஆலியா பட்டின் சிறிய வயது ரேர் வீடியோஸ் மற்றும் போட்டோஸ்!
AK61 update
கவின் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். வேட்டையின் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ஈர்த்திருந்த கவினும் பிக் பாஸ் மூலம் தான் பிரபலம் அடைந்தார். தற்போது நாயகனாக அறியப்படுகிறார்.
அஸ்வின் குமார் :
குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். சிவாங்கி - அஸ்வினின் அழகிய சேட்டைகள் அனைவரையும் கவர்ந்திருந்தது. தமிழில் என்ன சொல்லப் போகிறாய் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அஸ்வின்.
Biggboss: வெளியில அனுப்பாம விடமாட்டாங்க போலயே? நாமினேஷனின் அதிகம் டார்கெட் செய்யப்படும் போட்டியாளர்!
ரம்யா பாண்டியன் :
ஐவரும் குக் வித் கோமாளி ஷோ மூலம் தான் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னரப்பாக வந்த இவருக்கு பிக் பாஸ் தமிழ் மேலும் புகழை கொடுக்க ஆண் தேவதை என்னும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
pugazh
புகழ் :
நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக மாறிவிட்டார் புகழ். கலக்கப்போவது யாரு என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு கலக்கி வந்த இவருக்கு குக் வித் கோமாளி நல்ல பெயரை பெற்று கொடுக்க தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார் புகழ்.