- Home
- Cinema
- நடிகை நிவேதா பெத்துராஜுக்கு டும்டும்டும்... மாப்பிள்ளை இவரா? செம வெயிட்டு பார்ட்டியா இருக்காரே..!
நடிகை நிவேதா பெத்துராஜுக்கு டும்டும்டும்... மாப்பிள்ளை இவரா? செம வெயிட்டு பார்ட்டியா இருக்காரே..!
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

Nivetha Pethuraj Wedding Soon
தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்களுக்கு மவுசு இருக்காது என்பதற்கு நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சான்று. இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் நாயகி ஆக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிவேதா. இதை அடுத்து விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வந்தார் நிவேதா பெத்துராஜ்.
டோலிவுட்டில் பிசியான நிவேதா பெத்துராஜ்
அதன் பலனாக தெலுங்கில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டடித்தது. குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த அலவைகுண்டபுரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் டோலிவுட்டிலேயே செட்டில் ஆனார் நிவேதா பெத்துராஜ். கடந்த சில ஆண்டுகளாக இவர் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவே இல்லை. பக்கா மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் தற்போது டோலிவுட் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார். இவருக்கு சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் அதிகம். நன்கு கார் ஓட்ட தெரிந்த நிவேதா பெத்துராஜ் தல அஜித் போல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார்.
நிவேதா பெத்துராஜுக்கு கல்யாணம்
சினிமா நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த வரிசையில் லேட்டஸ்டாக நடிகை நிவேதா பெத்துராஜ் இணைந்திருக்கிறார். அவர் தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் பெயர் ராஜ் ஹித் இப்ரான். துபாயை சேர்ந்த இவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் நிவேதா பெத்துராஜ். இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்த திட்டமிட்டு இருக்கிறாராம் நிவேதா பெத்துராஜ்.
நிவேதா பெத்துராஜின் காதலன் யார்?
நிவேதா பெத்துராஜ் வருங்கால கணவர் ராஜ் ஹித் இப்ரான், துபாயில் தொழிலதிபராக உள்ளார். இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தன்னுடைய வருங்கால கணவரை கட்டிப்பிடித்தபடி நிவேதா பெத்துராஜ் போட்டுள்ள புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரின் திரை உலக நண்பர்களும் வாழ்த்துமழை பொழிந்த வண்ணம் உள்ளனர். சில ரசிகர்களோ இந்த பதிவை பார்த்து தங்கள் மனம் உடைந்து விட்டதாக கூறி வருகிறார்கள். திருமணம் எப்போது என்பது குறித்த அறிவிப்பை நடிகை நிவேதா பெத்துராஜ் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.