- Home
- Gallery
- அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டேன்... டாக்டர் கொன்றுவேன்னு சொல்லிட்டாரு - நிவேதா பெத்துராஜ்
அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டேன்... டாக்டர் கொன்றுவேன்னு சொல்லிட்டாரு - நிவேதா பெத்துராஜ்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

nivetha Pethuraj
தமிழ்நாட்டில் பிறந்து நன்கு தமிழ் பேசும் நடிகைகளுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை. அதற்கு சரியான உதாரணம் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்தவரான இவர், தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக பொதுவாக எம்மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத் தமிழன் போன்ற படங்களில் நடித்தார்.
Actress nivetha Pethuraj
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இவர் நடித்த படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் உஷாரான நிவேதா பெத்துராஜ், நைசாக டோலிவுட் பக்கம் ஒதுங்கினார். அங்கு இவர் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலைமை உருவானது. அல்லு அர்ஜுன் உடன் அலவைகுந்தபுரமுலு, ரெட் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்ததால் டோலிவுட்டில் பிசியான நடிகையானார் நிவேதா பெத்துராஜ்.
இதையும் படியுங்கள்... கார் டிக்கியை ஓபன் பண்ண முடியாது... சோதனை செய்ய வந்த போலீஸ்... போனை தட்டிவிட்டு நிவேதா பெத்துராஜ் அடாவடி
nivetha Pethuraj photos
அண்மையில் இவர் நடிப்பில் தெலுங்கில் பருவு என்கிற வெப் தொடர் வெளியானது. இதற்கான புரமோஷனின் ஒரு பகுதியாக தான் போலீசிடம் சிக்கி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நிவேதா பெத்துராஜ். பின்னர் தான் அது படத்தின் புரமோஷன் என தெரியவந்தது. இப்படி பருவு வெப் சீரீஸின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் அவர், தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டது குறித்தும் பேசி இருக்கிறார்.
nivetha Pethuraj about Plastic Surgery
அதன்படி அவர் கூறியதாவது : “எனக்கு பிளம் லிப்ஸ் வேண்டுமென ஆசைப்பட்டு என்னுடைய மருத்துவரிடம் போய் இன்ஜக்ஷன் போட முடியுமானு கேட்டேன். அவங்க, உன்ன கொன்றுவேன்னு சொன்னாங்க. ஏனெனில் இதுவே நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க. ஆனா பாலிவுட்ல சினிமாவில் நடிக்க வரும் முன்பே முகத்தை சர்ஜரி செய்து மாற்றிக்கொள்கிறார்கள். என்னைக்கேட்டால் அது நல்லதில்லை என்று தான் சொல்வேன். ஏனெனில் நித்யா மேனன், சாய் பல்லவி போன்ற நடிகைகள் அவற்றையெல்லாம் செய்யாமலேயே அழகாக இருக்கிறார்கள்” என நிவேதா பெத்துராஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்... Vijay Antony : "வார்னிங் கொடுக்கும் சரத்.. கேட்க மறுக்கும் விஜய் ஆண்டனி" - "மழை பிடிக்காத மனிதன்" ட்ரைலர் இதோ!