மீண்டும் தனி விமானத்தில் பறந்த நயன் - விக்னேஷ் சிவன்! கைகோர்த்துக் கொண்டு காதல் பயணம் சென்றது எங்கு தெரியுமா?
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு பணிகள் இல்லாததால், தனி விமானம் மூலம் நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன், கொச்சிக்கு பறந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் டேட்டிங் சென்று விடுகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் சற்று குறைந்து வருவதை தொடர்ந்து, சில தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் கொச்சிக்கு பறந்துள்ளனர்.
கொச்சிக்கு செல்வதற்காக இந்த இணை பிரியாத காதல் ஜோடிகள் இருவரும், விமான நிலையத்திற்கு வந்த போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.
இத்தனை நாட்கள் சென்னையில் ஒன்றாக பொழுதை கழித்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சில நாட்கள் நயன்தாராவின் அம்மாவுடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.