நீச்சல் உடையில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள் - பகீர் கிளப்பிய நடிகை மோகினி
Actress Mohini : தமிழ் படம் ஒன்றில் தன்னை கட்டாயப்படுத்தி நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டேன் என நடிகை மோகினி, சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

Actress Mohini Bad Experience in Cinema
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை மோகினி, 'கண்மணி' படத்தில் தனக்கு விருப்பமில்லாத கிளாமர் காட்சியில் நடிக்க தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆர்.கே.செல்வமணி இயக்கிய இப்படத்தில் நீச்சல் உடை அணிந்து நடிக்க மறுத்ததால், படப்பிடிப்பு பாதி நாள் தடைப்பட்டது என்றும், ஆண் பயிற்சியாளர்கள் முன் நீச்சல் கற்றுக்கொள்ள சங்கடமாக இருந்ததாகவும் மோகினி கூறினார்.
கண்மணி படத்தின் கசப்பான அனுபவம்
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி திட்டமிட்ட நீச்சல் உடை காட்சியில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். திடீரென வந்து நீச்சல் உடையில் நடிக்க சொன்னார்கள். அந்தக் காட்சியில் நடிக்க முடியாது என்று அழுதேன், அதனால் படப்பிடிப்பு பாதி நாள் தடைப்பட்டது. நீச்சல் தெரியாது என்பதை விளக்க முயன்றேன். ஆண் பயிற்சியாளர்கள் முன் நீச்சல் உடை அணிவது எனக்கு சங்கடமாக இருந்தது. அப்போது பெண் பயிற்சியாளர்கள் இல்லாததால், அந்தக் காட்சியில் நடிக்கவே முடியாது என்று சொன்னேன்.
வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள்
பாடல் காட்சிக்காகத்தான் அப்படி நடிக்க சொன்னார்கள். பாதி நாள் கழித்து, அவர்கள் கேட்டதை நான் செய்தேன். பின்னர் ஊட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றார்கள். நான் மறுத்தேன். அப்போது படப்பிடிப்பைத் தொடர முடியாது என்றார்கள். அதற்கு நான், 'அது உங்கள் பிரச்சினை, எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் என்னை முன்பு அந்தக் காட்சியில் நடிக்க வற்புறுத்தியது போலத்தான் இது' என்று சொன்னேன்.
வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க மறுத்த மோகினி
அதேபோல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கெளதம் மேனன் என்னை தான் முதலில் அணுகினார். ஆனால் நான் நோ சொல்லிவிட்டேன். ஏனெனில் சினிமாவில் நடிக்கக்கூடாது என்கிற முடிவில் உறுதியாக இருந்தேன். அதை இயக்குனர் கெளதம் மேனனும் புரிந்துகொண்டார். அதன்பின்னர் தான் சிம்ரனை அந்த ரோலில் நடிக்க வைத்தார்கள். என்னுடைய தம்பி மனைவி சூர்யாவின் தீவிர ரசிகை, நான் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததை அறிந்து அவர் என்மீது கோபப்பட்டார் என மோகின் கூறினார்.