காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை கரம் பிடிக்கும் தனுஷ் பட ஹீரோயின்..! குவியும் வாழ்த்து..!
பிரபல இளம் நடிகை மெஹரீன் கவுர் பிரீசண்டாவிற்கும், காங்கிரஸ் எம்எல்ஏ மகன், பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகவே... இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மெஹரீன். தனுஷுடன் இவர் இணைந்து நடித்த, 'பட்டாஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் விஜய்தேவரகொண்டா நடித்த 'நோட்டா' படத்திலும் நடித்திருந்தார்.
தெலுங்கிலும், முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், வருண் தேஜ், போன்றவர்களுக்கு ஜோடி சேர்ந்தார். செம பிஸியாக நடித்து வந்த இவருக்கும், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் காலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன் பாவ்யா பிஷ்னோய்யுடன் தான் தற்போது மெஹரீனுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் மார்ச் மாதம் 12ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளதாகவும், விரைவில் இவர்களுடைய திருமண தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் மெஹரீன் தன்னுடைய திருமணத்திற்கும் அணைத்து படங்களின் நடித்து முடித்து கொடுக்க வேண்டும் என படு தீவிரமாக உள்ளாராம். இந்த திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகவே, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மெஹரீனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.