- Home
- Cinema
- மஞ்ச காட்டு மைனாவாக மாறிய மீனா! 'முத்து' படத்துல பார்த்தது போலவே இருக்காங்களே... தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
மஞ்ச காட்டு மைனாவாக மாறிய மீனா! 'முத்து' படத்துல பார்த்தது போலவே இருக்காங்களே... தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
நடிகை மீனா, தீபாவளி மூடில் தகதகவென மஞ்சள் நிற புடவையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், நவரச நாயகன் கார்த்தி என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.
திருமணத்திற்குப் பிறகு அக்கா மற்றும் குழந்தைகளுக்கு அம்மா உள்ளிட்ட சீனியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து இவரது மகள், நைனிகாவும்.... தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்த, 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார்.
மகளும் நன்கு வளர்ந்து விட்டதால், மீனா வெப் சீரிஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிப்பதில் செம்ம பிஸியாகியுள்ளார்.
அந்த வகையில் நேற்றைய தினம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான, 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, மீனா மஞ்சள் நிற புடவையில்... பார்ப்பதற்கு 'முத்து' பட ஹீரோயின் போல் ஜொலிக்கும் அழகில் உள்ளார். அந்த போட்டோஸ் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.