கும்முனு இருந்த நடிகை கிரணா இது?... உடல் எடையை எவ்வளவு குறைச்சிட்டாங்க...!
உடல் எடையால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை கிரண், லாக்டவுன் நேரத்தில் வெயிட்டை குறைத்து செம்ம அழகான லுக்கில் கிளாமர் தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரணிடம் ஒரே கோரிக்கை தான் திரும்ப, திரும்ப வைக்கப்பட்டது. அதாவது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாற வேண்டும் என்பது தான்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குட்டை உடையில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள கிரணை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். என்ன மேடம் இப்படி மாறிட்டீங்க. ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு கிரண் பதிவிட்ட புகைப்படத்தில் கொஞ்சம் பூசினாற் போல் தான் காட்சியளிக்கிறார். ஆனால் இன்றைய போட்டோவிலே ஸ்லிம்மாக தெரிகிறார். இது பழைய போட்டோவாக இருக்குமோ? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இந்த லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு ஒரு வாரத்தில் மாற முடியுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலை கிரண் தான் சொல்ல வேண்டும்.