49 வயதில் மிட்நைட் மேட்னஸ் போஸ் கொடுத்த கஸ்தூரி! என்ன மேடம் நைட் ரொம்ப மூடா? தெறிக்க விட்ட நெட்டிசன்ஸ்!
நடிகை கஸ்தூரி மிட்நைட் மேட்னஸ் என்கிற கேப்ஷனுடன் ஒரு மார்க்கமான எடுத்து வெளியிட்டுள்ள செலஃ பிக்கு, நெட்டிசன்கள் தினுசு தினுசாக கமெண்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 'ஆத்தா உன் கோயிலிலே' எங்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர் இதை தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் 1992-ஆண்டு நடைபெற்ற 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள கஸ்தூரி... சர்ச்சைக்கு பஞ்சமிதாக நடிகையாக பார்க்கப்படுகிறார். காரணம் அரசியல், மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து தன்னுடைய மனதில் படும் எந்த கருத்தையும் அதிரடியாக கூறி... அதனால் வரும் எதிர்ப்புகளையும் தில்லாக சமாளிப்பார். இதுவே இவரின் தனித்துவம் என்றும் கூறலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி, எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர்.
தற்போது ஸ்டார் மா தொலைக்காட்சியில், 'பாக்கிய லட்சுமி' தொடரின் தெலுங்கு ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் தொடரில் பாக்கிய லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கஸ்தூரி, அவ்வப்போது போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் சுற்றுலா சென்றபோது எடுத்த வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் மிட்நைட் மேட்னஸ் என கூறி... சில செல்ஃபி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட நெட்டிசன்கள் என்ன கஸ்தூரி மேடம் ரொம்ப மூடா இருக்கீங்களா? என தாறுமாறாக கமெண்ட் போட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள்.