- Home
- Cinema
- பிரபல இசையமைப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்றேன் - நடிகை கல்யாணி பரபரப்பு பேட்டி
பிரபல இசையமைப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்றேன் - நடிகை கல்யாணி பரபரப்பு பேட்டி
நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி (Kalyani). அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவா உடன் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், மோகன் ராஜா இயக்கிய ஜெயம் (Jeyam) படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து சீரியல் பக்கம் ஒதுங்கிய இவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்துக்கு பின் படங்களிலும், சீரியல்களிலும் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் மெண்டராக பங்கெடுத்து வருகிறார் கல்யாணி (Kalyani).
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார் கல்யாணி (Kalyani). அவர் கூறியதாவது : “எனது குடும்பத்துக்கு நெருங்கிய நண்பராக இருந்த இசையமைப்பாளர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அப்போது எனக்கு 8 வயது இருக்கும், நான் தூங்கும் போது என்னை தேவையில்லாத இடங்களில் தொடுவார்.
நான் இதைப்பற்றி என் அம்மாவிடம் கூட சொன்னதில்லை. முதன்முறையாக என் கணவரிடம் தான் சொன்னேன். அவர் என்னுடையை சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு ஆறுதலாக இருந்தார். அதைப்பற்றி இப்போது நினைத்தால் கூட அருவருப்பாக இருக்கிறது.
அந்த இசையமைப்பாளர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமானவராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகம் வந்தது. இதுபோன்ற பாலியல் தொல்லைகளால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு முறை தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஓட்டுபோட கூட வராதவங்க இதுக்கு கரெக்டா வந்துட்டாங்க! அன்புச்செழியன் மகள் திருமணத்தில் குவிந்த சினிமா பிரபலங்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.