- Home
- Cinema
- ஓட்டுபோட கூட வராதவங்க இதுக்கு கரெக்டா வந்துட்டாங்க! அன்புச்செழியன் மகள் திருமணத்தில் குவிந்த சினிமா பிரபலங்கள்
ஓட்டுபோட கூட வராதவங்க இதுக்கு கரெக்டா வந்துட்டாங்க! அன்புச்செழியன் மகள் திருமணத்தில் குவிந்த சினிமா பிரபலங்கள்
சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், சிம்பு, யுவன், இளையராஜா ஆகியோர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட கூட வரவில்லை. ஆனால் பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்திருமணத்தில் தவறாமல் ஆஜராகி விட்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி பைனான்சியராக இருப்பவர் அன்புச்செழியன் (Anbuchezhiyan). அதுமட்டுமின்றி கோபுரம் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர், அதன்மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நேற்று கோலிவுட் திரையுலகமே இந்த திருமணத்தில் தவறாமல் கலந்துகொண்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகில் அன்புச்செழியனுக்கு (Anbuchezhiyan) செல்வாக்கு இருக்கிறது.
ரஜினி, கமல் தொடங்கி சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் தாணு, போனி கபூர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், சிம்பு, யுவன், இளையராஜா (Ilaiyaraaja) ஆகியோர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட கூட வரவில்லை. ஆனால் பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்திருமணத்தில் தவறாமல் ஆஜராகி விட்டனர்.
ஏனெனில் தற்போது தமிழ் நாட்டில் எந்த படம் ரிலீசாக வேண்டும் என்றாலும் அன்புச்செழியனின் தயவு நிச்சயம் வேண்டும் என்கிற நிலை தான் உள்ளதாம். திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியதை விட அன்புச்செழியனிடம் தங்களது வருகையை உறுதி செய்வதில் தான் குறியாக இருந்தனர்.
சினிமா தயாரிப்பு நிறுவனம், திரைப்பட விநியோகஸ்தர், பைனான்சியர் என பல வழிகளில் இன்று சினிமாத்துறைக்குள் அன்புச்செழியன் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆகையால் தான் அவரது இல்லத் திருமண விழா கோலிவுட் திரையுலகினரின் கூடாரமாக மாறியதாம்.