சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல... காட்டுத் தீ போல் பரவும் கஜோல் மகளின் டூமச் கிளாமர் போட்டோஸ்
நடிகை கஜோல் - அஜய் தேவ்கன் தம்பதியின் மகளான நைசாவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் தமிழிலும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த காஜல், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
பாலிவுட், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த காஜல், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நைசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... LCU-வில் இணைகிறாரா பொன்னியின் செல்வன்?... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை கேட்டு மெர்சலான ஜெயம் ரவி
கஜோல், அஜய் தேவ்கன் இருவருமே தற்போது சினிமாவில் படு பிசியாக நடித்து வருகின்றனர். கஜோல் நடிப்பில் அண்மையில் சலாம் வெங்கி என்கிற திரைப்படம் வெளியானது. இப்படத்தை நடிகை ரேவதி இயக்கி இருந்தார். அதேபோல் அஜய் தேவ்கனும் தற்போது போலா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார்.
இப்படி கஜோலும், அஜய் தேவ்கனும் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், விரைவில் அவரது மகளும் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருவார் என்கிற பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தான்.
நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நைசா அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது கஜோல் மகளா என கேட்கும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இவர் மட்டும் பாலிவுட்டில் அறிமுகமானால் சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக வந்து... சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வாரி வழங்கிய நயன்தாரா - வைரல் வீடியோ