- Home
- Cinema
- Kajal Agarwal : கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜலுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் - தீயாய் பரவும் போட்டோஸ்
Kajal Agarwal : கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜலுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் - தீயாய் பரவும் போட்டோஸ்
நடிகை காஜல் அகர்வாலுக்கு (Kajal Agarwal) வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக, தாங்கள் நடிக்கும் படங்களில் கிளாமரில் தூள் கிளப்பும் நடிகைகளில் ஒருவராக இருந்த காஜல் அகர்வால் (kajal Agarwal), தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.
30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு, இவருடைய நீண்ட நாள் காதலரான கெளதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு, நடிப்பதை நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து படங்கள் நடிப்பேன் என்று கூறினார் காஜல் (Kajal).
இந்தியன் 2 (Indian 2) வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்.. மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் அதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதே காரணம் என பின்னர் தம்பதிகள் தெரிவித்தனர். கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட காஜலை சிலர் உருவ கேலி செய்த சம்பவமும் சமீபத்தில் நடந்தது. இதற்கு சமூக வலைதளம் வாயிலாகவே காஜல் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு (Kajal Agarwal) வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நடந்ததை அறிந்த ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலரோ விரைவில் குட்டி காஜலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி நடிக்க போறாராம் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்