MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி நடிக்க போறாராம் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி நடிக்க போறாராம் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகிறார் விக்னேஷ் சிவன். இவர் எழுதும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு உண்டு. 

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2022, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி (Poda Podi) படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் துளிர்விட்டது. இன்றுவரை இந்த காதல் தொடர்ந்து வருகிறது. இவர்களது காதல் சக்சஸ் ஆனது போல் படமும் வெற்றிவாகை சூடியது. இதையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

36

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த விக்னேஷ் சிவன் (Vignesh shivan), அவரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

46

இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகிறார் விக்னேஷ் சிவன் (Vignesh shivan). இவர் எழுதும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு உண்டு. அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களுக்காக சமீபத்தில் இவர் எழுதிய பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.

56

சினிமாவில் பிசியாக இயங்கி வரும் விக்னேஷ் சிவன், தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக இவர் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) வெறித்தனமான ரசிகர். இவர் ஏற்கனவே தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தாலும், அண்மையில் அவரை சந்தித்ததும், அவருடன் எடுத்த புகைப்படமும் ரொம்ப ஸ்பெஷலாம். ஏனெனில், தோனியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் விக்கி. விரைவில் தனது இயக்கத்தில் தோனி நடிக்க உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

66

ஏற்கனவே அதர்வா எனும் படத்தில் நடிக்க தோனி (Dhoni) கமிட் ஆகி உள்ளார். தற்போது விக்னேஷ் சிவனின் கதைக்கும் ஓகே சொல்லி உள்ளதால் இந்த கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தோனியிடம் பூங்கொத்து கொடுத்தபடி விக்னேஷ் சிவன் (Vignesh shivan) வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... BB Ultimate : இனி இது ஒத்துவராது.... பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து திடீரென விலகிய கமல்? - காரணம் இதுதானாம்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம். எஸ். தோனி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Recommended image3
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved