MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Silk Smitha: அப்பாவுடன் தொடர்பு; மகனுடன் திருமணத்துக்கு தயாரான சில்க் ஸ்மிதா - ஷாக் கொடுத்த நடிகை!

Silk Smitha: அப்பாவுடன் தொடர்பு; மகனுடன் திருமணத்துக்கு தயாரான சில்க் ஸ்மிதா - ஷாக் கொடுத்த நடிகை!

சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், சில்க் ஸ்மிதா அவருடைய மகனையே திருமணம் செய்யவிருந்தார் என்று நடிகை ஜெயசீலா அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 25 2025, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கண்களில் போதை ஏற்றும் நடிகை:

கண்களில் போதை ஏற்றும் நடிகை:

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகு, மற்றும் போதை ஏற்றும் கண்களை பார்த்தும் பல ரசிகர்கள் சொக்கி கிடந்தனர். அதே போல் கிளாமர் காட்சியில் இவர் நடித்தாலும், அவை முகம் சுழிக்காமல்... பெண்களே பார்த்து ரசிக்கும் விதத்தில் இருக்கும். சில்க்கின் கிளாமரை ஆண்கள் மட்டும் அல்ல, பல ரசிகைகளும், நடிகைகளும் கூட ரசித்துள்ளனர். இதை சுலக்ச்சனா, அனுராதா போன்ற நடிகைகள் வெளிப்படையாகவே கூறி உள்ளனர்.
 

26
. சில்க் ஸ்மிதா பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ்,மற்றும் கிளாமர் ரோல்களில் தான் நடித்தார்.:

. சில்க் ஸ்மிதா பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ்,மற்றும் கிளாமர் ரோல்களில் தான் நடித்தார்.:

சினிமாவில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்து, சில வருடங்களிலேயே பெரிய ஸ்டார் இமேஜை பெற்றவர் சில்க். பல ஸ்டார் ஹீரோக்கள் இவரின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடந்த காலங்களும் உண்டு. சில்க் ஸ்மிதா பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ்,மற்றும் கிளாமர் ரோல்களில் தான் நடித்தார். 

ரிஜக்ட் செய்த பாரதிராஜாவையே தேடி வர செய்த காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா – எந்த படமுன்னு தெரியுமா?
 

36
சம்பள விஷயத்தில் கதாநாயகிகளையே மிஞ்சிய சில்க்:

சம்பள விஷயத்தில் கதாநாயகிகளையே மிஞ்சிய சில்க்:

இது தவிர தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா ஐட்டம் டான்சராக இருந்த போது, ஸ்டார் கதாநாயகிகளை மிஞ்சும் விதத்தில் சம்பளம் வாங்கியவர்.  காரணம், சில்க் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் என்கிற தகவலை கேள்வி பட்டாலே அந்த படத்துக்கு கூட்டம் களைகட்டும். இதுவே பெரிய நடிகர்களை இவருக்காக காத்திருக்க வைத்தது.
 

46
தற்கொலை செய்து கொண்டு உயிர்விட்ட நடிகை:

தற்கொலை செய்து கொண்டு உயிர்விட்ட நடிகை:

மிகவும் ஏழ்மையில் இருந்து, சினிமாவில் உச்சாணி கொம்பில் அமர்ந்த சில்க் ஸ்மிதா, தன்னுடைய இளகிய மனசு காரணமாகவே பல ஏமாற்றங்களை சந்தித்தார். ஆண்களை நம்பி ஏமார்ந்து துரோகத்தின் வலியை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன்னுடைய சேலையிலேயே உயிர் விட்டார். இவரின் மரணத்திற்கு பணக்கஷ்டம், தயாரித்த படத்தின் தோல்வி என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும்... காதலின் வலியும், துரோகமும் தான் உண்மையான காரணம் என கூறப்படுகிறது. 

பாலிவுட்டிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த அழகி! யாருக்கும் தெரியாத பக்கங்கள்!
 

56
சில்க் ஸ்மிதாவுக்கு ராதாகிருஷ்ணன் செய்த உதவி:

சில்க் ஸ்மிதாவுக்கு ராதாகிருஷ்ணன் செய்த உதவி:

இங்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து அவர் தற்கொலைக்கு செல்ல காரணம் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. இதை அவர் தனது தற்கொலை கடிதத்திலும் சில்க் ஸ்மிதா குறிப்பிட்டிருந்தார். ஆர்.எம்.பி மருத்துவரான ராதாகிருஷ்ணன், சில்க் ஸ்மிதா தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டார். சில்க் ஸ்மிதாவுக்கு ராதாகிருஷ்ணன் பல விதத்தில் உதவியாக இருந்தார். இதுவே அவர்கள் இடையே தொடர்பு ஏற்படவும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
 

66
ஜெயசீலா கூறிய அதிர்ச்சி தகவல்

ஜெயசீலா கூறிய அதிர்ச்சி தகவல்

ஒரு கட்டத்தில் சில்க் சுமிதாவுக்கு, ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும்... எனவே  ராதாகிருஷ்ணாவின் மகனை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ள சில்க் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்த பிறகு அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட துரோகம் தான் கடைசியில் சில்க்கை தற்கொலை வரை கொண்டு சென்றது என்று ஜெயசீலா சுமன் டிவி பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயம் கேட்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சில்க் ஸ்மிதா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved