அழகில் அம்மா கௌதமியை மிஞ்சிய மகள் சுப்புலட்சுமி..! ஹீரோயின் லுங்கியில் ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியின் தற்போதைய புகைப்படத்தில், அழகு தேவதையாக ஜொலிக்கிறார். இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
80 மற்றும் 90களில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் கௌதமி. தற்போது இவரது மகள், அம்மாவையே அழகில் மிஞ்சும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆந்திராவில் பிறந்த வளர்ந்த கௌதமி, தெலுங்கு திரையுலகில் தான் முதலில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, தமிழில்... ரஜினிகாந்த் - பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் இவருக்கு குவிய துவங்கியது.
மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' என்னுடைய கதை அல்ல..! அப்போ யாருடையது? ஆச்சர்ய தகவலை வெளியிட்ட செல்வராகவன்!
ஹிந்தி, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கெளதமி, ஒரு கட்டத்தில் தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். அப்போதே நடிகர் கமல்ஹாசனின் காதல் சர்ச்சையில் சிக்கி பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு பறந்தார் கௌதமி.
சந்தீப் பாத்தியா என்பவரை, 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கௌதமி... வெளிநாட்டுக்கு பறந்தார். பின்னர் தன்னுடைய மகள் பிறந்த பின்பு, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
மேலும் செய்திகள்: உன் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே ஒரு கனவுதான்.. அம்மாவை கட்டிப்பிடித்து விக்கி வெளியிட்ட எமோஷனல் போட்டோ
இதை தொடர்ந்து சென்னை வந்த கௌதமி, மகள் வளர்ந்த பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தார். பின்னர் இருவரும் சுமார் 10 வருடங்கள், லிவிங்டூ கெதர் வாழ்க்கை முறையில் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமலை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கௌதமி ஃபேஷன் டிசைனிங் காஸ்டியூமராகவும், பல்வேறு சமூக சேவை பணிகளிலும் தன்னை ஈடுபத்திக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: 'வெண்ணிலா கபடிக்குழு' நடிகரின் பரிதாப நிலை! 6 மாசம் தான் உயிருடன் இருப்பாரா? கண் கலங்க வைத்த பேட்டி!
இவருடைய மகள் சுப்புலட்சுமியுடன் கௌதமி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஏற்கனவே சுப்புலட்சுமி திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை கௌதமி மறுத்துவந்தார்.
ஆனால் தற்போது அம்மா கௌதமியை மிஞ்சும் பேரழகியாக மாறியுள்ளார் சுப்பு. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து இளம் ஹீரோயினை போல் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வரும் நிலையில், விரைவில் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குனர்கள் அணுகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மேலும் செய்திகள்: ''புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!