MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன்! செய்தியாளர்களிடம் ஆதங்கப்பட்ட நடிகை கௌதமி!

நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன்! செய்தியாளர்களிடம் ஆதங்கப்பட்ட நடிகை கௌதமி!

நடிகை கௌதமி தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும், இதை விட்டுவிட மாட்டேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 18 2024, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gauthami

Gauthami

தமிழ் சினிமா நடிகை கௌதமி கடந்த சில காலமாக தான் மோசடி செய்யப்பட்ட நிலம் குறித்து போராடி வருகிறார். தனது நிலத்தை விற்பதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று நடிகை கௌதமி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரான அவர் நீதிபதி முன் விளக்கம் அளித்தார்.

24
Gauthami Land Case

Gauthami Land Case

அவரை மோசடி செய்த சினிமா நிதியாளர் அழகப்பனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கௌதமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும், இதை விட்டுவிட மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இன்று தான் படம் ரிலீஸ் ஆச்சு! அதற்குள் போஸ் வெங்கட் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

34
Gauthami Land Fraud case

Gauthami Land Fraud case

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நடிகை கௌதமிக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த சினிமா நிதியாளர் அழகப்பன் ரூ.3.1 கோடி மோசடி செய்ததாகத் தெரிகிறது. அவரிடமிருந்து தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி கௌதமி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.-யிடம் புகார் அளித்தார்.

44
Gauthami sensational speech

Gauthami sensational speech

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது. இதையொட்டி வியாழக்கிழமை கௌதமி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி நீதிபதி முன் விளக்கம் அளித்தார். அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். அதன் பிறகு அவர் ஊடகங்களிடம் பேசுகையில், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றார்.

விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் - நீட்டா அம்பானி ஆட்டம்.! சல்மான் கான் பாட்டிற்கு செம டான்ஸ்!
Recommended image2
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Recommended image3
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved